துடைப்பத்தில் கண்ணாடி விரியன்... தெரியாமல் தொட்ட பெண்... மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

Update: 2022-11-27 15:23 GMT

கடலூரில் பாம்பு கடித்ததில் பெண் ஒருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கடலூர் கொண்டூர் பகுதியை சேர்ந்தவர் உமா மகேஸ்வரி.

இவரது வீட்டின் துடப்பத்தின் மேல் பகுதியில் கண்ணாடி விரியன் பாம்பு ஒன்று இருந்துள்ளது.

இது தெரியாமல் துடப்பத்தை உமா மகேஸ்வரி எடுத்த போது, பாம்பு அவரை கடித்துள்ளது.

உடனடியாக மயக்கமடைந்த உமாவை மீட்ட உறவினர்கள், அவரை கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

மேலும் தகவலின் பேரில் வீட்டிற்கு சென்ற பாம்பு ஆர்வலர் செல்லா, பாம்பை மீட்டு, வனப்பகுதிக்குள் விடுவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்