கவர்ச்சி கரமான திட்டங்களை கூறி கோடிக்கணக்கான பணத்தை மோசடி செய்த கும்பல்... 12 பேர் மீது வழக்குபதிவு - ஒரு பெண் உட்பட நால்வர் கைது
ஆன்லைன் வர்த்தக நிறுவனம் மூலம் கோடிக்கணக்கில் பண மோசடி செய்த வழக்கில், தலைமறைவான ஒரு பெண் உட்பட நால்வரை போலீசார் கைது செய்துள்ளனர். நாமக்கல் கணேசபுரத்தை சேர்ந்தவர் செந்தில்குமார். இவருடன் 12 பேர் சேர்ந்து நாமக்கல் துறையூர் சாலையில் ஆன்லைன் வர்த்தக நிறுவனம் நடத்தி வந்துள்ளனர். இந்த நிறுவனம் பல கவர்ச்சி கரமான திட்டங்களை கூறி மூதலீட்டாளர்களின் கோடிக்கணக்கான பணத்தை மோசடி செய்ததாக புகாரளிக்கப்பட்டது. இது குறித்து 12 பேர் மீது வழக்குபதிவு செய்த போலீசார் , தலைமறைவானவர்களை தேடி வந்தனர். இந்நிலையில், சென்னையை சேர்ந்த ஒரு பெண் உட்பட நால்வரை கைது செய்துள்ள போலீசார், அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.