நடுக்கடலில் திடீரென மீனவருக்கு நெஞ்சுவலி..உயிருக்கு போராடியவருக்கு நடந்த அதிர்ஷ்டம்.
ராமேஸ்வரம் அருகே நடுக்கடலில் நெஞ்சுவலியால் தவித்த மீனவரை கடலோர காவல்படையினர் சிகிச்சை அளித்து காப்பாற்றினர். மண்டபம் பகுதிக்கு அருகே கடலுக்குள் 35 கிலோமீட்டர் தொலைவில், படகில் இருந்த மீனவர் ஒருவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் அவசர உதவி கோரினார். இதையடுத்து, 'ராணி ரஷ்மோனி' கப்பலில் விரைந்த கடலோர காவல்படை மருத்துவர்கள், மீனவருக்கு சிகிச்சை அளித்தனர். அரை மணி நேர சிகிச்சைக்குப் பிறகு அவரது உடல்நிலை சீரடைந்தது. இதையடுத்து, மீனவர் பயணித்த படகை துறைமுகத்திற்கு திரும்புமாறு உத்தரவிடப்பட்டது.