சிறுவனை கவ்வி சென்ற கொடூர சிறுத்தை. திருப்பதி மலையேறும் பக்தர்களுக்கு எச்சரிக்கை "இப்படி சென்றால் நீங்கள் தப்பிக்கலாம்"

Update: 2023-06-24 02:35 GMT

திருப்பதியில் இருந்து திருமலைக்கு பாத யாத்திரையாகச் செல்லும் பக்தர்கள், கூட்டம் கூட்டமாக செல்ல வேண்டுமென தேவஸ்தானம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

திருப்பதியில் இருந்து திருமலைக்கு பாதயாத்திரையாக சென்று கொண்டிருந்தவர்களில், 5 வயது சிறுவனை பாய்ந்து தாக்கிய சிறுத்தை, வனப்பகுதிக்குள் கொண்டு சென்றது. பின்னர் அடர்ந்த வனப்பகுதியில் சிறுவனை விட்டுவிட்டு அங்கிருந்து சிறுத்தை சென்றது. படுகாயங்களுடன் மீட்கப்பட்ட சிறுவனுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலை​யில், அந்த சிறுத்தையை கூண்டுவைத்து பிடிக்க வனத்துறையிடம் அனுமதி கேட்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. சிறுத்தை பிடிபடும் வரை, இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தவிர்க்க, நடந்து மலையேறி செல்லும் பக்தர்கள், கூட்டம் கூட்டமாக செல்ல வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. பக்தர்களை கூட்டமாக சேர வைத்து பின்னர் திருப்பதி மலைக்கு அனுப்பும் பணியில் தேவஸ்தான விஜிலன்ஸ் துறையினர் ஈடுபட்டுள்ளனர். மேலும் பாதயாத்திரையாக பயணிக்கும் பாதையில், பாதுகாப்பு ஊழியர்க​ளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்