விற்பனைக்காக கஞ்சாவை பங்கு பிரிக்கும் போது ஏற்பட்ட தகராறில் நண்பனை குத்தி கொன்ற கொளையாளிகள் ஒரு வருடத்திற்கு பிறகு போலீசில் சரணடைந்துள்ளனர்.
சென்னை, பெரியார் நகரை சேர்ந்தவர் கார்த்திக். இவர் தாம்பரம் அருகே கடந்தாண்டு சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் கொலையாளிகளை போலீசார் தேடி வந்தனர். இதில், நண்பரின் இறுதி சடங்கிற்கு சென்ற கார்த்திக், அங்கு விற்பனைக்காக கஞ்சாவை பங்கு பிரிக்கும் போது, ஏற்பட்ட தகராறில் நண்பர்களால் அடித்து கொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ஒரு வருடமாக தலைமறைவாக இருந்த கொலையாளிகள் மூவரும், போலீசில் சரணடைந்துள்ளனர். சரணடைந்த சதாம் உசேன், அருண் குமார், மற்றும் சரவணன் கைது செய்த போலீசர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.