ரூ.14 லட்சத்தை சுருட்டி கொண்டு ஓடிய ஜோடி...தேனியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

Update: 2023-06-27 06:20 GMT

மகாராஷ்டிராவை சேர்ந்த ஜாதவசங்கர் என்பவர், கடந்த 20 ஆண்டுகளாக ஆண்டிப்பட்டி சுப்பிரமணியன் நாடார் தெருவில் வசித்து வருகிறார். இவர், வங்கியில் ஏலம் விடும் நகைகளை வாங்கி மறு விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில், கொண்டமநாயக்கன்பட்டி வடக்கு தெருவை சேர்ந்த சத்திய பிரியா மற்றும் அவரது கணவர் கணேசன் ஆகிய இருவரும், தனியார் வங்கியில் அடகு வைத்துள்ள 44 சவரன் தங்க நகைகள் ஏலம் போகும் நிலையில் உள்ளதாகக் கூறி, அந்த நகைகளை திருப்ப ஜாதவசங்கரிடம் இருந்து 14 லட்சம் ரூபாய் தரும்படி கேட்டுள்ளனர். அதனை நம்பிய ஜாதவசங்கர் 14 லட்சம் ரூபாய் கொடுத்த நிலையில், பணத்துடன் சென்ற தம்பதி திரும்பி வராததால் அவர் அதிர்ச்சி அடைந்தார். இதுதொடர்பான புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார், கணேசனை கைது செய்த நிலையில், தலைமறைவான சத்தியபிரியாவை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்