59 வயதில் விவாகரத்து கோரிய தம்பதி- 10 ஆண்டு விசாரணைக்கு பிறகு இணைந்தனர்
59 வயதில் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை நாடிய தம்பதியினர் 10 வருட வழக்கு விசாரணைக்கு பிறகு 69 வயதில் மீண்டும் ஒன்றிணைந்தனர்.
கர்நாடக மாநிலம் தும்கூர் குடும்ப நல நீதிமன்றத்தில் 59 வயதில் விவாகரத்து கேட்டு தம்பதியினர் வழக்கு தொடர்ந்தனர். சுமார் பத்து ஆண்டு காலம் வழக்கு விசாரணை நடைபெற்ற நிலையில் இந்த தம்பதியினருக்கு நீதிமன்றத்தின் சார்பில் கவுன்சிலிங் வழங்கப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட தம்பதியினர் மீண்டும் சேர்ந்து வாழ்கிறோம் என விருப்பம் தெரிவித்ததால் நீதிமன்றம் வழக்கை ரத்து செய்தது. பின்னர், நீதிமன்ற வளாகத்திலேயே இருவரும் மாலை அணிவித்து, மீண்டும் இணைந்து வாழ்வதற்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டன. இதே போல் மேலும் 4 தம்பதியினரும் சேர்ந்து வாழ விருப்பம் தெரிவித்ததால் அவர்களையும் நீதிமன்றம் விவாகரத்து வழக்கு ரத்து செய்து சேர்த்து வைத்தது.