100 வயதை கடந்த தம்பதிக்கு டூம்...டூம் - ஆறு தலைமுறைகள் சேர்ந்து நடத்திய பிரமாண்ட திருமணம்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே, 100 வயதை கடந்த தம்பதிக்கு நடந்த வைரவிழாவில், ஐந்து தலைமுறை குடும்பத்தினர், உறவினர்கள் பங்கேற்று ஆசி பெற்றனர். தேன்கனிக்கோட்டையில், முனியப்பா - மாரம்மா தம்பதிக்கு வைர விழா நடைபெற்றது. இதில், புரோகிதர்கள் வேத மந்திரங்கள் ஓத, கெட்டி மேளம் கொட்டி மலர் மாலைகள் அணிவித்து தம்பதிக்கு திருமணம் நடந்தது. இதில், மகன்கள், மகள்கள், மருமகன்கள், மருமகள்கள், பேரன், பேத்திகள், கொள்ளு பேரன், பேத்திகள் என, ஆறு தலைமுறையைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்று ஆசி பெற்றனர். பின்னர், அனைவருக்கும் அறுசுவை உணவு பரிமாறப்பட்டது.