ராணுவம், துணை ராணுவம் இடையே ஏற்பட்ட மோதல்..வெடித்த கலவரம்..27 பேர் பலி - சூடானில் பரபரப்பு
ஆப்பிரிக்க நாடான சூடானில் ராணுவம் மற்றும் துணை ராணுவம் இடையே ஏற்பட்ட பெரும் மோதலால் கலவரம் வெடித்த நிலையில், அந்நாட்டில் உள்ள இந்தியர்கள் பத்திரமாக வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சூடான் அதிபர் மாளிகை, கார்டூம் சர்வதேச விமான நிலையம் மற்றும் ராணுவ தளத்தை துணை ராணுவமான ஆர் எஸ் எஃப் சுற்றி வளைத்து கைப்பற்றின. இந்த மோதல்களால் சூடானில் அசாதரணமான சூழல் நிலவி வரும் நிலையில், தொடர்ந்து துப்பாக்கிச் சூடுகளும், சண்டைகளும் நிகழ்ந்து வருவதால் இந்தியர்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த மோதல்களில் 27 பேர் பலியானதுடன் 170க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.