காதலிக்குமாறு மாணவியை டார்ச்சர் செய்த சிறுவன் - உடனே நடந்த அதிர்ச்சி சம்பவம்
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே பன்னிரண்டாம் வகுப்பு மாணவியை காதலிக்குமாறு கூறி தொந்தரவு கொடுத்த 2 பேரை போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்தனர். குமந்தபுரத்தைச் சேர்ந்த அந்த மாணவிக்கு அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவனும், மணி என்ற இளைஞரும் தொந்தரவு கொடுத்ததாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் மணி மற்றும் சிறுவனை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.