அழகிய பெண் குழந்தை... பிறந்து 13 நாட்களில் நடந்த சோகம்!கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி
கல்லாவி பகுதியை சேர்ந்த சுபதேவ் - லாவண்யா தம்பதிக்கு ஏற்கனவே 2 பெண்கள் குழந்தைகள் உள்ள நிலையில், 3வதாக அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது. பிறந்து 13 நாட்களே ஆன நிலையில், குழந்தை திடீரென மயங்கிய நிலையில் இருந்துள்ளது. பின்னர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட குழந்தை, ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனிடையே, இறப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, வழக்குப்பதிவு செய்த போலீசார், குழந்தையை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.