தோழியின் திருமண விழாவில் உற்ச்சாகமாக நடனமாடிய 22 வயது இளைஞர் மரணம்

Update: 2023-06-02 02:13 GMT

தோழியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நடனமாடிய நண்பர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

தாம்பரம் அடுத்த சிட்லபாக்கத்தைச் சேர்ந்த 22 வயது இளைஞர் மணி பிரசாத், நொளம்பூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற தோழியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, நண்பர்களுடன் சேர்ந்து உற்சாகமாக நடனமாடிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென பிரசாத் மயங்கி விழுந்த நிலையில், அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். காவல்துறையினர் இது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நொளம்பூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நண்பர் ஒருவரும் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்