காதலித்து விட்டு பேச மறுத்த அக்கா உறவு முறை இளம்பெண்ணை துடிதுடிக்க கொன்ற 17 வயது சிறுவன் - திருச்சியில் பயங்கரம்
திருச்சியில் கல்லூரி மாணவி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், அவரது உறவினரான 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையத்தை சேர்ந்த அழகு பாண்டியன் என்பவரது மகள் ஜோஷிதா. இவர், திருச்சியில் உறவினர் வீட்டில் தங்கி பிஎஸ்சி முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில், ஜோஷிதா கழுத்து மற்றும் முதுகு பகுதிகளில் ஆயுதங்களால் குத்தப்பட்டு இறந்து கிடந்துள்ளார். தகவலறிந்து சென்று உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவியும், அவரது உறவினரான 17 வயது சிறுவனும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அக்கா தம்பி உறவுமுறை என்பதால் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், மாணவி பேசுவதை நிறுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சிறுவன், மாணவியை கழுத்தை நெரித்தும், கத்தியால் குத்தியும் கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர்.