ஒரே மையத்தில் தேர்வு எழுதிய 700 பேர் தேர்ச்சி.. விசாரணை நடத்த டிஎன்பிஎஸ்சிக்கு கோரிக்கை பாமக நிறுவனர் ராமதாஸ்
நில அளவையர் தேர்வில் முறைகேடு நடந்ததா என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டுமென பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், நில அளவையர் தேர்வில் காரைக்குடி மையத்தில் தேர்வு எழுதிய 700 பேர் தேர்ச்சி பெற்றிருப்பது ஐயத்தை ஏற்படுத்துவதாக கூறியுள்ளார். தேர்ச்சி பெற்றவர்களில் பெரும்பான்மையானோர், ஒரே தனியார் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றவர்கள் என்பது ஐயத்தின் அளவை உயர்த்தியிருப்பதாக குறிப்பிட்டுள்ள அவர், இதுகுறித்து விசாரணை நடத்த தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆணையிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.