பள்ளிக்கு செல்லாததை கண்டித்து 7 வயது சிறுவனுக்கு காலில் சூடு - வளர்ப்பு தந்தையின் செயலால் அதிர்ச்சி

Update: 2023-04-20 16:03 GMT

கோட்டைமேடு பகுதியை சேர்ந்த சுல்தான் இப்ராஹிம் - சர்மதா என்ற தம்பதிக்கு 7 வயதில் மகன் உள்ளார். திருப்பூரை சேர்ந்த முசாதிக் என்பவருடன் சர்மதாவுக்கு பழக்கம் ஏற்பட்டு தகாத உறவாக மாறியுள்ளது. அதனைத் தொடர்ந்து, முதல் கணவரை விட்டு, 7 வயது மகனுடன் பிரிந்து சென்ற சர்மதா, 2வதாக முசாதிக்கை திருமணம் செய்து கொண்டார். பள்ளிக்கு செல்லாததைக் கண்டித்து, 7 வயது சிறுவனின் காலில், முசாதிக் சூடு வைத்துள்ளார். இந்த விவகாரம் சுல்தான் இப்ராஹிமுக்கு தெரியவர, அவர் முசாதிக் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்