Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (09-11-2022) | Morning Headlines | Thanthi TV

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (09-11-2022) | Morning Headlines | Thanthi TV

Update: 2022-11-09 00:52 GMT

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் இன்று குறைந்த காற்றழுத்த பகுதி உருவாகிறது...நவம்பர் 11 மற்றும் 12ஆம் தேதிகளில் மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்...

55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்பதால், மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம்...கடலூர் மாவட்ட மீனவர்களுக்கு மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை...

நேபாளத்தில் நள்ளிரவில் 6 புள்ளி 3 ரிக்டர் அளவில் நிலடுக்கம்...வீடுகள் இடிந்து விழுந்ததில் 3 பேர் பலி என முதல்கட்ட தகவல்...

டெல்லியில் இன்று அதிகாலை சுமார் 2 மணி அளவில் லேசான நிலநடுக்கம்...நேபாளத்தில் நிகழ்ந்த நிலநடுக்கத்தின் எதிரொலி....

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 4 ஆயிரம் உதவிப் பேராசிரியர்கள் நியமிப்பதாக அறிவிப்பு...போட்டித் தேர்வு மூலம் நியமிக்கப்படுவது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை கல்லூரி கல்வி இயக்குனரகம் வெளியிட்டது, ...

பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு தீ்ர்ப்பு தொடர்பாக வரும் 12ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம்...முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் கூட்டத்துக்கு, ஒவ்வொரு சட்டமன்ற கட்சி சார்பாக 2 பிரதிநிதிகளுக்கு அழைப்பு...

10 சதவீத இடஒதுக்கீடு தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து திமுக சார்பில் மறுசீராய்வு மனு...திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு...

அரசு பணிக்கு தனியார் நிறுவனங்கள் மூலம் ஆட்களை அமர்த்த திமுக அரசு முயற்சிப்பதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு...அரசாணை எண் 115 ஐ திரும்ப பெற வேண்டும் எனவும் வலியுறுத்தல்...

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு 40க்கு 15 இடங்கள் கூட கிடைக்காது...தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து...

மேக மூட்டத்தால், தமிழகத்தில் சந்திர கிரகணம் தென்படவில்லை...இந்தியாவில் கொல்கத்தா, பாட்னா நகரங்களில் தெரிந்தது...

வெளிநாடுகளில் முழுமையாக தெரிந்த சந்திர கிரகணம்...அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா நாடுகளில் மக்கள் ஆர்வமாக பார்த்தனர்.....

சந்திர கிரகணம் காரணமாக, நேற்று பிற்பகலில் கோயில்கள் மூடப்பட்டன...திருப்பதி, தஞ்சை உள்ளிட்ட கோயில்களில் இரவு 7 மணிக்கு மேல் சிறப்பு பூஜைகளுடன் மீண்டும் திறப்பு... 

Tags:    

மேலும் செய்திகள்