2 நாள்களில் 60 புயல் தாக்குதல்.. உருக்குலைந்த அமெரிக்கா.. 32 பேர் உயிரிழப்பு
அமெரிக்காவைப் பந்தாடிய புயலில் சிக்கி பலியானவர்கள் எண்ணிக்கை 32ஆக அதிகரித்துள்ளது.
அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய பகுதிகளில் கடும் புயல் வீசியது. இதில் இல்லினாய்ஸ், டென்னிசி, மிசிசிப்பி, அயோவா, ஒக்லஹாமா, அர்கன்சாஸ் உள்ளிட்ட மாகாணங்கள் கடுமையான சேதங்களை சந்தித்துள்ளன. ஏராளமான வீடுகள், கட்டடங்கள் கடும் சேதம் அடைந்ததுடன், மரங்கள் முறிந்து சாலைகளில் விழுந்து கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மின் கம்பங்கள் சரிந்து விழுந்தன. இதனால் மின்தடை ஏற்பட்டு பல நகரங்களில் சுமார் 5 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் மின்சாரம் இன்றி தவித்து வருகின்றனர். 2 நாட்களில் மட்டும் 60 புயல்கள் உருவானதாக தெரிவிகப்பட்டுள்ளது. இந்நிலையில், புயல் பாதிப்புகளால் பலியானோர் எண்ணிக்கை 32ஆக அதிகரித்துள்ளது. மேலும் பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.