6 ஆண்டுகள் ஊரை விட்டு ஒதுக்கிய அவலம்...சிறுமிக்கு சிறுநீர் கொடுத்த அதிர்ச்சி - கண்ணீருடன் குமுறும் குடும்பம் - தர்மபுரியில் மனதை உலுக்கும் சம்பவம்

Update: 2023-06-28 15:19 GMT

நாய்க்குத்தி என்னும் மலைக்கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னக்கரியன். இவர் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு, பக்கத்து தோட்டத்தில் வசித்த ஆறுமுகம் என்பவருக்கு வழித்தடம் இல்லாததால், 3 சென்ட் இடத்தை விளக்கி கொடுத்துள்ளார். இந்நிலையில், 16 ஆண்டுகளுக்கு முன்பு ஆறுமுகத்தின் மகன் சக்திவேல், இதில் 5 சென்ட் இடத்தை போலியாக பத்திரப்பதிவு செய்துள்ளார். இதனை அறிந்த சின்னக்கரியன், இது குறித்து சக்திவேலிடம் கேட்டபோது, சக்திவேல், சாமிகண்ணு, தங்கவேல் ஆகிய மூவரும் சேர்ந்து சின்னக்கரியன் மற்றும் அவர் மனைவியை தாக்கியுள்ளனர். இது குறித்து புகாரளித்தும், நடவடிக்கை மேற்கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும், சின்னக்கரியனுக்கு சொந்தமான இடத்தில், அவரது மகளுக்கு கட்டிக் கொடுத்த வீட்டையும், ஊர்மக்கள் இடித்துள்ளனர். தொடர்ச்சியாக, 2018-ஆம் ஆண்டு முதல் அவரது குடும்பத்தினரையும் ஊரை விட்டு தள்ளி வைத்துள்ளனர். இதனிடையே, சின்னக்கரியனின் பேத்தியையும், பள்ளியில் வைத்து பாட்டிலில் சிறுநீரை அடைத்து குளிர்பானம் என ஏமாற்றி குடிக்க வைத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட அக்குடும்பத்தினர், உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்