காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (13-12-2023) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2023-12-13 00:55 GMT

இந்திய தேர்தல் ஆணையர் பணி நியமன திருத்த மசோதா மாநிலங்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றம்...

இந்த மசோதா, முற்றிலும் அரசுக்கு சாதகமாக இருக்கும் என திமுக எம்பி திருச்சி சிவா குற்றச்சாட்டு... 

--

சென்னையில் பட்டாளம், புளியந்தோப்பு, காரப்பாக்கம், வேளச்சேரி பகுதிகளில் புயல் வெள்ள பாதிப்பை ஆய்வு செய்த மத்திய குழுவினர்...

பாதிப்பில் இருந்து மீள்வதற்கு நிரந்தர தீர்வை ஏற்படுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை...

---

2015 பாதிப்புடன் ஒப்பிடுகையில், தமிழக அரசு துரிதமாக செயல்பட்டுள்ளது...

மீட்பு பணிகளை அரசு சிறப்பாகவே கையாண்டுள்ளது எனவும் மத்திய குழுவின் தலைவர் குணால் சத்யார்த்தி பாராட்டு... 

---

சென்னை எண்ணூர் பகுதிகளில் எண்ணெய் கசிவு ஏற்பட்டதற்கு, சிபிசிஎல் நிறுவனமே காரணம்...

தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் பசுமை தீர்ப்பாயத்தில் பகிரங்க குற்றச்சாட்டு...

எண்ணெய் பரவலை தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் திருப்திகரமாக இல்லை என தீர்ப்பாயம் காட்டம்...

---

பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதாக்களை குடியரசு தலைவருக்கு அனுப்பிய ஆளுநரின் செயலை சட்ட விரோதம் என அறிவிக்க வேண்டும்...

உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு... தலைமை நீதிபதி அமர்வு முன் இன்று விசாரணை... 

---

ஜம்மு காஷ்மீர் மற்றும் புதுச்சேரியில் பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் மசோதா...

மக்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றம்...

----

அனுமதியற்ற கட்டுமானங்கள் மேற்கொள்வோர் மீது கிரிமினல் வழக்குப் பதிந்து https://youtu.be/GcNN2dpBiFYhttps://youtu.be/GcNN2dpBiFYநடவடிக்கை எடுக்க வேண்டும்...

சென்னையை போல் மதுரையின் நிலையும் மாறிவிடக்கூடாது எனவும் உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் வேதனை...

----

Tags:    

மேலும் செய்திகள்