மகாராஷ்டிராவில் வெங்காயம் விளைச்சல் கணிசமாக அதிகரித்துள்ளதால், அதன் விலை கடுமையாக சரிந்துள்ளது.
இந்நிலையில், சோலாப்பூர் அருகே பார்ஷி பகுதியைச் சேர்ந்த ராஜேந்திர துக்காராம் சவான் என்ற விவசாயி, தனது நிலத்தில் விளைந்த சுமார் 500 கிலோ வெங்காயத்தை, அருகில் உள்ள வேளாண் விளைபொருள் விற்பனை கூடத்திற்கு எடுத்து சென்றார்.
விலை கடுமையாக சரிந்துள்ளதால், ஒரு கிலோ வெங்காயம் ஒரு ரூபாய் என்ற அளவிலேயே விற்க முடிந்ததால், சுமார் 512 கிலோ வெங்காயத்திற்கு 512 ரூபாய் 49 பைசா கிடைத்துள்ளது.
இதில் லாரி வாடகை, சுமை கூலியாக 510 ரூபாய் பிடித்தம் செய்யப்பட்ட நிலையில், மீதமுள்ள இரண்டு ரூபாய்க்கான காசோலை துக்காராமிடம் வழங்கப்பட்டது.
இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.