கூலித் தொழிலாளியை அடித்து கொன்ற 5 இளைஞர்கள் - சாராயக்கடையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

Update: 2023-05-05 09:44 GMT

புதுச்சேரியில் சாராயக் கடையில் கூலித்தொழிலாளியை அடித்துக் கொலை செய்த வழக்கில், 5 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம், வளவனூர் சின்னக்குப்பத்தைச் சேர்ந்தவர் அய்யப்பன். இவர் கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து, புதுச்சேரி உறுவையாரில் உள்ள தங்கை வீட்டில் தங்கி, கூலி வேலை செய்து வந்தார். சில தினங்களுக்கு முன்பு, அந்த பகுதியில் உள்ள சாராயக்கடைக்கு அவர் சென்றபோது, அவருக்கும், அங்கு மது குடிக்க வந்த 5 இளைஞர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது, 5 பேரும் சேர்ந்து தாக்கியதில், அயப்பன் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். இதையடுத்து, புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், 2 தினங்களுக்கு முன்பு உயிரிழந்தார். இதுதொடர்பாக, மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, 5 பேரையும் அடையாளம் கண்டு கைது செய்தனர். மது போதையில் இருந்த அய்யப்பன் தங்களை தகாத வார்த்தைகளால் திட்டியதால் அடித்து கொலை செய்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்