டைட்டானிக் கப்பலை பார்க்க நீர்மூழ்கியில் சென்று மாயமான 5 பேர்.. இறந்து விட்டார்கள்..?அதிர்ச்சி தகவல்

Update: 2023-06-23 02:44 GMT

அட்லாண்டிக் கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலின் சிதைந்த பாகங்களை காண கடலுக்கடியில் சென்ற போது மாயமான சுற்றுலா நீர்மூழ்கி கப்பலில் இருந்த 5 பேரும் இறந்திருக்கலாம் என அமெரிக்க கடலோர காவல்படை அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். கனடாவில் இருந்து கடந்த 16ம் தேதி கடலுக்குள் சென்ற அந்த நீர்மூழ்கி கப்பல் கடலின் ஆழத்தில் சென்ற போது சிக்னல் துண்டிக்கப்பட்டது. இதையடுத்து கனடா, அமெரிக்க கடலோர காவல்படையினர் மாயமான நீர்மூழ்கி கப்பலை , விமானம் மற்றும் கப்பல்கள் மூலம் தேடும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டனர். நீர்மூழ்கி கப்பலில் கொண்டு செல்லப்பட்ட ஆக்சிஜன் தீர்ந்து விடும் என்பதால் அதில் பயணம் செய்த 5 பேரையும் உயிருடன் மீட்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில் நீர்மூழ்கி கப்பல் கடலுக்கடியில் சுமார் 1600 அடி ஆழத்தில் கண்டறியப்பட்டுள்ளதாகவும், அதில் இருந்த 5 பேரும் இறந்திருக்கலாம் என்றும் அமெரிக்க கடலோர காவல்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த அனைவரின் குடும்பத்திற்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்