"45 கோடி வரி ஏய்ப்பு..?" - சொந்த வீடே இல்லாத பெண்ணுக்கு வந்த நோட்டீஸ் - வாணியம்பாடியில் பரபரப்பு

Update: 2022-11-01 03:19 GMT

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் சொந்த வீடே இல்லாத பெண்ணுக்கு 45 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக நோட்டீஸ் வந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வாணியம்பாடியைச் சேர்ந்த பாத்திமா பேகத்துக்கு 45 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்தாக வேலூரில் உள்ள வரி அலுவலகத்தில் இருந்து நோட்டீஸ் வந்துள்ளது. அதில் F.N. டிரேடர்ஸ் என்ற பெயரில் வரி செலுத்த தவறியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பாத்திமா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன் பாத்திமாவின் வீட்டிற்கு வந்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு சென்றனர். மேலும், வாணியம்பாடியில் உள்ள தனியார் வங்கியில் அடமானம் வைத்துள்ள நகைகளை மீட்க சென்றபோது, வரியை செலுத்தினால் மட்டுமே நகையை மீட்க முடியும் என்று வங்கி அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், புகாரின் பேரில், வாணியம்பாடி நகர காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்