ஈவு இரக்கமின்றி 354 பேருக்கு தூக்கு.. ஈரானை பார்த்து குலைநடுங்கும் உலகம் - தோலுரிக்கப்பட்ட அரசின் அரக்க முகம்
ஈரானில் இந்த ஆண்டு மட்டும் இதுவரை 354 பேர் தூக்கிலிடப்பட்டுள் ளதாக வெளியாகியிருக்கும் தகவல் ஒட்டுமொத்த உலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. என்ன நடக்கிறது ஈரானில் என்பதை விவரிக்கிறது இந்த தொகுப்பு...
மத்திய கிழக்கு நாடான ஈரானில் அதிபர் இப்ராகிம் ரைசி தலைமையிலான ஆட்சி நடைபெறுகிறது. இஸ்லாமிய நாடான ஈரானில் கடுமையான சட்ட நடைமுறைகள் அமலில் உள்ள நிலையில், சட்டத்தை மீறினால் மிகக் கடுமையான தண்டனைகள் விதிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஈரானில் ஷிராஸ் நகரில் நடைபெற்ற தாக்குதலில் தொடர்புடைய ஐ.எஸ் அமைப்பை சேர்ந்த இரண்டு குற்றவாளிகள், கடந்த சனிக்கிழமையன்று பொதுமக்கள் கண்ணெதிரே தூக்கிலிடப்பட்ட கொடூரம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதன் மூலம், ஈரானில் இந்த ஆண்டில் மட்டும் இதுவரை தூக்கிலிடப்பட்டவர்கள் எண்ணிக்கை 354 ஆக அதிகரித்துள்ளதாக நார்வேயை தளமாகக் கொண்ட மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
இதனிடையே அங்கு ஆண்டுக்கு ஆண்டு, தூக்கிலிடப் படுவோரின் எண்ணிக்கை கனிசமாக உயர்ந்து வருவது உலக நாடுகளை கவலை அடைய செய்துள்ளது.
அதே போல், போதைப்பொருள் விவகாரத்தில் தூக்கிலிடப் பட்டவர்கள் எண்ணிக்கையும் கடந்த ஆண்டை விட 126 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதனிடையே தூக்கிலிடப்பட்டவர்களில் பெரும்பாலான வர்கள் மிகவும் தாழ்த்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்கள் என்ற தகவல் அரசின் கொடூர முகத்தை தோலுரித்துக் காட்டுவதாக அமைந்துள்ளது.
உலகின் பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில், ஈரானில் தான் ஆண்டுதோறும் அதிகம் பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுகிறது.
அரசுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபடுவோரை அச்சுறுத்தி ஒடுக்கவே, பெரும்பாலான குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்படுதாக கவலையுடன் தெரிவிக்கின்றனர் அரசியல் நிபுணர்கள்.
ஹிஜாப் விவகாரத்தில் உலக நாடுகளின் கண்டனத்திற்கு உள்ளான ஈரான் தற்போது மரண தண்டனை விவகாரத்திலும் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளது.