30 கிலோ தங்க கடத்தல் வழக்கு... அதிரடி காட்டும் அமலாக்கத்துறை அதிகாரிகள்

Update: 2023-04-18 10:39 GMT

கேரளாவில் தூதரகத்தின் பெயரில் தங்கத்தை கடத்திய வழக்கில், ஏஜென்டுகளாக செயல்பட்டவர்களின் சொத்து பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் பெயரில், கேரளாவுக்கு கடத்தி வரப்பட்ட 30 கிலோ தங்கத்தை 2020ம் ஆண்டு சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றினர்.

விசாரணையில் இதேபோன்று தங்க கடத்தல் பலமுறை நடந்தது அம்பலமான நிலையில், இதற்கு மூளையாக செயல்பட்ட கேடி ரமீஸ் என்பவரை அமலாக்கத்துறை தற்போது கைது செய்துள்ளது.

இதனிடையே கடத்தலுக்கு ஏஜென்டுகளாக இருந்து தங்கத்தை பெற்றுச் சென்றவர்களின் சொத்துக்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்து வருகிறது.

https://youtu.be/8iz1dE77Fu4அந்த வகையில், கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த இருவர் மற்றும் கோவையைச் சேர்ந்த நந்தகோபால் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களிடம் இருந்து 27 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள தங்கம், ஒரு கோடியே 13 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன

Tags:    

மேலும் செய்திகள்