ஒடிசா ரயில் விபத்து குறித்து வதந்திகளை பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என, ஒடிசா காவல்துறை தெரிவித்துள்ளது. பாலசோரில் நிகழ்ந்த ரயில் விபத்துக்கு, சில சமூக ஊடகங்கள் மூலம் மதவாத வண்ணம் கொடுப்பது மிகவும் துரதிருஷ்டவசமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், இதுபோன்ற தவறான நோக்கமுள்ள பதிவுகளை பரப்புவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
ஒடிசா ரயில் விபத்தில் 275 உயிரிழந்ததாக, அம்மாநில தலைமைச் செயலாளர் பிரதீப் ஜெனா தெரிவித்துள்ளார். விபத்தில் 288 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியான நிலையில், மாவட்ட ஆட்சியரிடம் தரவு சரிபார்க்கப்பட்டு, சில உடல்கள் இருமுறை எண்ணப்பட்டது கண்டறியப்பட்டதாக பிரதீப் ஜெனா குறிப்பிட்டுள்ளார். 275 உடல்களில் 88 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்து உள்ளார்.
ஒடிசாவில், ரயில் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் மற்றும் தற்போதைய நிலைமை குறித்து பிரதமர் நரேந்திர மோடியிடம், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் எடுத்துரைத்தார். அப்போது, நெருக்கடியான நேரத்தில் திறம்பட செயல்பட்ட ஒடிசா அரசுக்கும், பல்வேறு உதவிகளைச் செய்த அம்மாநில மக்களுக்கும், பிரதமர் நன்றி தெரிவித்தார். எந்தவிதமான உதவிகளையும் செய்ய மத்திய அரசு தயாராக இருப்பதாகவும் நவீன் பட்நாயக்கிடம் மோடி தெரிவித்தார்.
ஒடிசா ரயில் விபத்தை அடுத்து, அலுவலர்கள் இரவு - பகல் பாராமல் அர்ப்பணிப்புடன் மேற்கொண்டு வரும் பணி, விபத்தில் சிக்கியோரை அடையாளம் கண்டறிவதில் முக்கிய பங்காற்றி வருவதாக, தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.புவனேஸ்வரில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு கட்டுப்பாட்டு அறைக்கு, இந்தியாவின் வெவ்வேறு ஊர்களில் இருந்து தவிப்போடும் - ஏக்கத்துடனும் ஏராளமான அழைப்புகள் வந்த வண்ணம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
புகழுக்கெல்லாம் முன்வந்து நிற்க கூடிய பிரதமர் மோடி, ஒடிசா ரயில் விபத்துக்கு முதல் ஆளாக வராதது ஏன் என்று திமுக எம்.பி. தயாநிதி மாறன் கேள்வி எழுப்பினார். எல்லா புகழுக்கும் முதல் ஆளாக வரக்கூடியவர் பிரதமர் மோடி என்றும், ரயில் விபத்துக்கு பிரதமர் மோடி பொறுப்பேற்று இருக்க வேண்டாமா? என்றும் அவர் கேட்டு உள்ளார்,