டெல்லி-ஜெய்ப்பூர் சாலையை முற்றுகையிட்ட 200 பேர்.. போலீசார் மீது கற்களை வீசியதால் பரபரப்பு
ராணுவத்தில் அஹிர் படைப்பிரிவு அமைக்க கோரி 200- க்கும் மேற்பட்டோர் டெல்லி - ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையை முற்றுகையிட முயன்றனர்.
கெர்கி தௌலா சுங்கச்சாவடியில் போராட்டம் நடத்தப்பட்ட நிலையில், போராட்டக்காரர்கள் திரண்டு டெல்லி-ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையை முற்றுகையிட முயன்றனர்.
இதனை தடுத்து போலீசார் அவர்களை கைது செய்ய முயன்ற போது, சிலர் அவர்கள் மீது கற்களை வீசி தாக்க துவங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.