கடந்த ஆண்டில் மட்டும் 200க்கும் மேற்பட்ட புதிய கோள்கள் வானியலாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புறக்கோள்களைக் கண்டுபிடிக்க விஞ்ஞானிகளுக்கு ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி பேருதவியாக இருந்துள்ளது.
2022ம் ஆண்டின் துவக்கத்தில் கண்டுபிடிக்கப்பட்ட புறக்கோள்களின் எண்ணிக்கை வெறும் 5 ஆயிரமாக இருந்த நிலையில், ஆண்டின் முடிவில் அது 5 ஆயிரத்து 235ஆக அதிகரித்துள்ளது.
அவற்றில் 4 சதவீத கோள்கள் பூமி, செவ்வாயைப் போல் பாறை கிரகங்கள் ஆகும். சமீபமாக கூட நெப்டியூனைப் போன்ற புறக்கோள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.
சமீபத்திய கண்டுபிடிப்பு ஒன்றில், 2 புறக்கோள்களில் தண்ணீர் இருக்கலாம் என வானியலாளர்கள் கண்டறிந்தது குறிப்பிடத்தக்கது.