1993 ASP கட் பண்ணா 2023 DGB இன்ஜினியர் To போலீஸ்... யார் இந்த சங்கர் ஜிவால்?

Update: 2023-06-30 03:11 GMT

தமிழகத்தின் புதிய டிஜிபியாக சங்கர் ஜிவால் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் கடந்த வந்த பாதையை பார்க்கலாம்...

உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சங்கர் ஜிவால், பி.இ மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பட்டதாரியானதுடன், அதில் முதுகலைப் பட்டமும் பெற்றவர்.

இன்ஜினியரிங் படிப்பு முடிந்ததும், படிப்பு சார்ந்த பணியில் சிறிது காலம் அவர் இன்ஜினியராக பணிபுரிந்தார்.

அதன் பிறகு தனது எதிர்கால கனவை நிறைவேற்றிடும் வகையில்,1990 ம் ஆண்டு இந்திய காவல் பணிக்கு தேர்வாகி தமிழ் நாட்டில் தன்னுடைய காவல் பணியை துவக்கினார்.

முதன் முதலாக திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் 1993 ம் ஆண்டு ஏஎஸ்பியாக பணியாற்றினார். பின்னர் 1995 ம் ஆண்டு சேலம் மாவட்ட எஸ்.பி, 1997 ல் மதுரை மாவட்ட துணை ஆணையர், அதன் பிறகு, மத்திய போதைப்பொருள் தடுப்புப்பிரிவான என்.சி.பியில் எஸ்.பி, திருச்சி போலீஸ் கமிஷனர் போன்ற பதவிகளில் திறம்பட பணியாற்றினார்.

இதன் பின்னர் கடந்த 2008 ம் ஆண்டு முதல் 2011 ம் ஆண்டு வரை உளவுத்துறையில் டி.ஐ.ஜி, மற்றும் ஐ.ஜி யாக பணியாற்றிய சங்கர் ஜிவால், அந்த காலகட்டத்தில் சக்தி வாய்ந்த அதிகாரியாக திகழ்ந்தார்.

அதன் பின்னர், 2011 முதல் 2021 வரை காவல்துறையில் முக்கியத்துவம் அற்ற பணிகளான சிறப்பு அதிரடிப்படை, ஆயதப்படை, ஆவின் சிறப்பு அதிகாரி உள்ளிட்ட பணிகளில் பணியமர்த்தப்பட்டார்.

கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு பிறகு சங்கர் ஜிவாலுக்கு மீண்டும் முக்கியத்துவம் கொடுப்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் தான். கடந்த 2021 ம் ஆண்டு மே மாதம் சென்னை மாநகர காவல் ஆணையராக சங்கர் ​ஜிவால் நியமிக்கப்பட்டார்.

இந்த நிலையில், தமிழக டிஜிபி சைலேந்திரபாபு வரும் 30-ம் தேதியுடன் ஓய்வு பெற உள்ள நிலையில், உளவுத்துறையில் நீண்ட அனுபவம் கொண்ட சங்கர் ஜிவால் தான் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்