"தமிழ்ல பேசாத இந்தில பேசுனு சொல்றாங்க..தமிழர்களுக்கு இங்க மரியாதையே இல்ல" - மனம் நொந்து பேசும் தமிழர்
முகவர்களை நம்பி மலேசியாவுக்கு வேலைக்கு சென்று ஏமாந்த 186 பேர் தமிழகத்திற்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர். தமிழகத்தை சேர்ந்த பலர் முகவர்கள் மூலமாக சுற்றுலா விசாவில் வேலைக்காக மலேசியா சென்றுள்ளனர். அவர்களை அனுமதிக்க மறுத்த மலேசிய அதிகாரிகள் அறையில் அடைத்து வைத்திருந்ததாகவும், உணவு உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் திருச்சி, பெரம்பலூர், புதுக்கோட்டை, அரியலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 186 பேர், இந்திய வெளியுறவு துறை நடவடிக்கையால் மலேசியாவிலிருந்து விமானம் மூலம் திருச்சி வந்தனர். சுற்றுலா விசாவிற்கு மலேசியாவில் மதிப்பு இல்லை என்றும், முகவர்களை நம்பி வெளிநாட்டிற்கு யாரும் வேலைக்கு செல்ல வேண்டாம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.