தந்தையின் செயலால் 17 வயது மகள் எடுத்த விபரீத முடிவு.. உருக்கமான கடிதம்..வேலூரில் அதிர்ச்சி
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே தந்தையின் குடிப்பழக்கத்தால் கடிதம் எழுதி வைத்து விட்டு சிறுமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சின்ன ராஜா குப்பம் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி விஷ்ணு பிரியா. கூலித்தொழிலாளியான இவரின் தந்தை குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால், வீட்டில் அவ்வப்போது சண்டை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால், மனஉளைச்சலில் இருந்த விஷ்ணுபிரியா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். கடிதத்தில், தந்தை குடிப்பழக்கத்தை நிறுத்தி விட வேண்டும் , எனது குடும்பம் எப்பொழுது மகிழ்ச்சியாக இருக்கின்றதோ அப்போதுதான் எனது ஆத்மா சாந்தி அடையும் என எழுதி வைத்துள்ளார்.