ஆசைகாட்டிய யூடியூப் விளம்பரம் - 1.10லட்சத்தை பறிகொடுத்த வியாபாரி

Update: 2022-12-17 06:11 GMT

ஆன்லைனின் காய்கறி விற்பனை செய்ய விரும்பி, ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாயை வியாபாரி பறிகொடுத்த நிலையில், அந்த பணத்தை சைபர் கிரைம் போலீசார் மீட்டுக்கொடுத்தனர்.

நெல்லை மாவட்டம் துலுக்கர் பட்டி பகுதியைச் சேர்ந்தவர் 63 வயதான மனோகரன்.

இவர் ஆன்லைனில் காய்கறி வியாபாரம் செய்வதற்காக நிறுவனம் ஒன்றில் ஒரு லட்சத்து 10 ஆயிரம் பணம் செலுத்தியுள்ளார்.

ஆனால் சிறிது நாட்களிலேயே தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர், நெல்லை மாவட்ட சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்தார்.

இதனை தொடர்ந்து, சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி, வங்கி கணக்கு எண்ணை வைத்து , மனோகரனுடைய ஒரு லட்சத்து பத்தாயிரம் ரூபாயை மீட்டு அதன் ஆவணத்தை அவரிடம் ஒப்படைத்தனர்.

மேலும், இணையத்தில் வியாபாரம் செய்யும் போது நிறுவனம் பற்றி நன்கு அறிந்தும், விற்பனை செய்பவர்களின் உண்மை தன்மையை ஆராய்ந்தும் செயல்படும்படி கேட்டுக்கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்