இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (21-02-2023)

Update: 2023-02-21 17:53 GMT

தமிழ்நாட்டின் நிதி நிலை அறிக்கை மார்ச் 2வது வாரத்தில் தாக்கல் செய்யப்படும் எனத் தகவல்...மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டம் குறித்து அறிவிப்பு வெளியாக வாய்ப்பு...

திருவாரூர் கிடங்கு வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட நெல் சேமிப்பு நிலையத்தை நேரில் ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின்...விவசாயிகளின் உழைப்பால் உருவாகும் நெல்மணிகளை பாதுகாப்பாக சேமிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்...

2 நாள் பயணமாக திருவாரூர் சென்ற முதலமைச்சர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு...சன்னதி தெருவில் மக்களை சந்தித்த கோரிக்கை மனுக்களை பெற்றார்...

திருவாரூர் அருகே காட்டூரில் அஞ்சுகம் அம்மாள் நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை..திருவாரூர் கமலாலய தெப்பக் குளத்தில் உள்ள நாகநாத சுவாமி கோயிலை, படகில் சென்று பார்வையிட்டார்...

விரைவில், ஓபிஎஸ் ஆளுநராகவும், ஈபிஎஸ் பாஜக தலைவராகவும் நியமிக்கப்படுவார்கள்...ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு...

ஈரோடு கிழக்கு தொகுதியில் ஓபிஎஸ் அணி மாவட்ட செயலாளர் உள்ளிட்டோர் 106 பேர் கூண்டோடு ராஜினாமா...

பாக். எல்லையில் விழுந்த அபினந்தனை 24 மணி நேரத்தில் ஒப்படைக்காவிட்டால் இந்தியாவின் மொத்த ராணுவமும் பாகிஸ்தானை தாக்கும் என்று சொன்னவர் பிரதமர் மோடி...ராணுவம் பற்றி திமுகவுக்கு என்ன தெரியும் என்றும் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி...

ராணுவ வீரர் பிரபு உயிரிழப்பு சம்பவத்தை கண்டித்து பாஜக மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி...சேப்பாக்கத்தில் தொடங்கி போர் நினைவு சின்னம் வரை நிகழ்ந்தது

திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை வழக்கு தொடர்பாக மேலும் இருவர் கைது...குர்தீப் பாஷா, அஷ்ரஃப் கான் ஆகியோரை அழைத்து வந்து தனிப்படை போலீஸார் விசாரணை

திமுக பற்ற வைத்துள்ள நெருப்பு, இந்தியா முழுக்க பற்றி எரியும்....சிவசேனா கட்சி தற்போதுதான் விழித்திருக்கிறது என்றும் திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா பேச்சு...

Tags:    

மேலும் செய்திகள்