- அவதூறு வழக்கில், 2 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து ராகுல் காந்தி தொடர்ந்த வழக்கு....குஜராத் உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்குகிறது......
- செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையிடம் வாய் திறந்தால் திமுக ஆட்சிக்கு ஆபத்து.....ஆட்சியை காப்பாற்றவே, செந்தில்பாலாஜி காப்பாற்றப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
- செந்தில் பாலாஜி வழக்கில் எதையும் மறைக்காமல், அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய வேண்டும்........அமலாக்கத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு....
- செந்தில் பாலாஜி மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீது 3வது நீதிபதியின் விசாரணையை தள்ளிவைப்பு....எப்போது விசாரணை என்பதை நாளை பட்டியலிடுமாறு உயர்நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் உத்தரவு...
- ஒ.பி.ரவீந்திரநாத் வெற்றி செல்லாது என்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யலாம் என நீதியரசர் கூறியிருக்கிறார்....உயர்நீதிமன்ற உத்தரவை சுட்டிக்காட்டி முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி...
- நாட்டில் நியாயமும், தர்மமும் இன்னும் உள்ளது என்பதற்கு சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பே சாட்சி....தேர்தல் நேரத்தில் ஏராளமான முறைகேடுகளில் ஓ.பி.ரவீந்திரநாத் தரப்பு ஈடுபட்டதாக ஈவிகேஎஸ் இளங்கோவன் குற்றச்சாட்டு.....
- ஓ.பி.ரவீந்திரநாத்தின் சொத்து விவரங்கள் குறித்து தேர்தல் அதிகாரி முறையான விசாரணை செய்யவில்லை என சென்னை உயர்நீதிமன்றம் சாடல்....அசையும் சொத்துகள், ரியல் எஸ்டேட் மூலம் கிடைத்த வருமானம், வாணி ஃபேப்ரிக்ஸ் நிறுவன பங்குகள் போன்றவற்றை வேட்பு மனுவில் காட்டாமல் மறைத்ததாக தீர்ப்பில் தகவல்...
- ஓ.பி. ரவீந்திரநாத் மேல்முறையீடு செய்ய ஏதுவாக வெற்றி செல்லாது என்ற உத்தரவு 30 நாட்கள் நிறுத்தி வைப்பு....சென்னை உயர்நீதிமன்றம் ஆணை....
- 2019 மக்களவைத் தேர்தலில், தேனி தொகுதியில் ஓ.பி. ரவீந்திரநாத் வெற்றி பெற்றது செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு....
- சந்திரயான்-3 விண்கலம் வரும் 14ம் தேதி விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ அறிவிப்பு....ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் ஏவுதளத்தில் இறுதிகட்ட பணிகள் தீவிரம்....
- 290-க்கும் மேற்பட்டோரை பலி கொண்ட ஒடிசா ரயில் விபத்து தொடர்பான பரபரப்பு விசாரணை அறிக்கை வெளியானது....ரயில் விபத்துக்கு சிக்னல் மற்றும் தொலைதொடர்பு பிரிவின் அலட்சியமே பிரதான காரணம் என அதிர்ச்சி தகவல்....
- ராஜ்பவனில் கோப்புகளை பெற்றுக் கொண்டு, அதற்கான ஒப்புதலும் அளித்துவிட்டு தற்போது கோப்புகளே வரவில்லை என்று மறைப்பதா?... அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு எதிரான ஊழல் வழக்குகளில் இசைவாணை வழங்குவதை மேலும் தாமதிக்க கூடாது என ஆளுநருக்கு அமைச்சர் ரகுபதி மீண்டும் வலியுறுத்தல்....
- அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழக்கு தொடர்பாக அரசிடம் இருந்து எந்தவித ஆவணங்களும் வரவில்லை என ஆளுநர் ஆர்.என்.ரவி தகவல்....முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீதான வழக்கில், முறையாக அங்கீகரிக்கப்பட்ட நகலை அரசு அளிக்காததால் முடிவெடுக்க முடியாத நிலை உள்ளதாக பதில்....