1008 ஆதரவற்ற, மாற்றுத்திறனாளி குழந்தைகள்... திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வைத்த சேகர் ரெட்டி - நெகிழ வைத்த தருணம்
தமிழ்நாட்டை சேர்ந்த 1008 மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்றோர், பின்தங்கிய பிரிவுகளை சேர்ந்தவர்கள், திருப்பதியில் ஏழுமலையானை சாமி தரிசனம் செய்தனர். சென்னையை சேர்ந்த ராஜஸ்தான் யூத் மெட்ரோ மற்றும் புட் பேங்க் அறக்கட்டளைகள் சார்பில் அவர்கள் அழைத்து வரப்பட்டனர். அவர்களை தேவஸ்தானத்தின் சென்னை மண்டல ஆலோசனைக் குழு உறுப்பினர் சேகர் ரெட்டி, 300 ரூபாய் தரிசனம் வழியாக அழைத்துச் சென்று சாமியை தரிசனம் செய்ய வைத்தார். பின்னர், அவர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் உணவும், லட்டு பிரசாதமும் வழங்கப்பட்டன.