மகளிருக்கு மாதம் ரூ.1000.. முதல்வர் முக்கிய ஆலோசனை.. அலர்ட்டான கலெக்டர்கள்

Update: 2023-07-07 02:43 GMT

மகளிருக்கு ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்கும் திட்டம், செப்டம்பர் 15ம் தேதி முதல் செயல்படுத்தப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

தொடர்ந்து, மகளிர் உரிமை தொகை வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது, பயனாளிகள் தேர்வு உள்ளிட்டவை குறித்து முதல்வர் ஸ்டாலின் அண்மையில் ஆலோசனை நடத்தினார்

இதயைடுத்து, மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்திற்கான சிறப்பு அதிகாரியாக இளம் பகவத் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டார்

இத்திட்டத்திற்கு 7 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 1 கோடி பேருக்கு மகளிர் உரிமை தொகை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

திட்டத்திற்கான பயனாளிகள் தேர்வு மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட உள்ள நிலையில், மகளிர் உரிமைத்தொகை திட்டம் தொடர்பாக, முதல்வர் ஸ்டாலின் இன்று மீண்டும் ஆலோசனை நடத்துகிறார்.

காணொலி மூலம் நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில், அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், வருவாய் மற்றும் காவல்துறை அதிகாரிகள், வங்கி மேலாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்