கடலுக்குள் சென்ற 10 வீடுகள், படகுகள்.. ஆக்ரோஷமானஅலைகள் நிகழ்த்திய சோகம்.. மாண்டஸ் புயலின் கோர ஆட்டம்
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மற்றும் அதனை ஒட்டியுள்ள கடற்கரையில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. கடல் அலைகள் சுமார் 10 அடி உயரத்திற்கு எழுந்து ஆக்ரோஷத்துடன் கரைக்கு வந்து செல்கிறது. இதனால் பிள்ளைச்சாவடி கிராமத்தில் உள்ள 6 வீடுகள் முழுமையாக கடல் அலைகளால் அடித்துச் செல்லப்பட்டன. 3க்கும் மேற்பட்ட படகுகளையும் அலைகள் இழுத்துச் சென்றன. தென்னை மரங்கள் வேரோடு முறிந்து விழுந்து அலையில் சிக்கி கடலுக்குள் சென்ற நிலையில், பிள்ளைச்சாவடியில் கடல் அரிப்பைத் தடுக்க தூண்டில் வளைவு அமைக்காததே இத்தனை பாதிப்புகளுக்கும் காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.