"கல்லூரி மாணவர்கள் காதலிக்க 1 வாரம் விடுமுறை" - அசத்தலான அறிவிப்பை வெளியிட்டுள்ள சீன கல்லூரிகள்

Update: 2023-04-02 14:09 GMT

சீனாவில் பிறப்புவிகிதம் குறைந்து வரும் நிலையில், கல்லூரி மாணவர்கள் காதலிக்க 1 வாரம் விடுமுறை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

சீனாவில் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க பல ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக கல்லூரிகள் அரசின் இந்த முயற்சிக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளன. அதன்படி, சீனாவில் உள்ள 9 கல்லூரிகள் தங்கள் மாணவர்கள் காதலிப்பதற்காக 1 வாரம் விடுமுறை அளித்துள்ளன. இயற்கையை ரசித்துக் கொண்டே மாணவர்கள் காதலை வளர்ப்பதற்காக இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்