"ஒரு முஸ்லிம் ஓட்டு கூட எங்களுக்கு வேண்டாம்.." - பாஜகவின் ஈஸ்வரப்பா பேச்சால் வெடித்தது சர்ச்சை!
இஸ்லாமியர்களிடம் இருந்து ஒரு வாக்கு கூட தேவையில்லை என, பாஜகவின் முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா பேசியது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் வரும் பத்தாம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் சிவமோகா நகரில் பாஜக சார்பில், தேர்தல் பணிக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய, முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா, தேர்தல் பிரசாரத்தில், சாலை, குடிநீர் வடிகால் போன்ற வளர்ச்சி திட்டங்கள் குறித்து பேச தேவையில்லை என கூறியுள்ளார். இந்து தர்மத்தை காப்பாற்ற அனைவரும் ஒன்று சேர வேண்டும் என தெரிவித்துள்ளார். இது மட்டுமில்லாமல், ஐம்பதாயிரம் இஸ்லாமியர்கள் வாக்காளர்களாக உள்ளனர் என்றும் அவர்களிடம் இருந்து ஒரு வாக்கு கூட தேவையில்லை என கூறியுள்ளார். இந்த பேச்சு தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்து-இஸ்லாமியர்கள் இடையே உள்ள பிரச்சனை குறித்தும் இந்து தர்மம் குறித்தும் மக்களிடம் பேசி தேர்தலை சந்திப்போம் என ஈஸ்வரப்பா பேசியது, விவாதத்தை கிளப்பியுள்ளது.