கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் முதல் நாளில் இருந்து பெண்கள் அரசு பேருந்தில் இலவச பயணம் செய்யும் திட்டம் அமல்படுத்தப்படும் என ராகுல் காந்தி அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில், பெண்களுக்கு அரசுப்பேருந்தில் இலவச பயணம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனிடையே மங்களூரூவில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் உரையாற்றிய ராகுல்காந்தி, காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் திட்டம் அறிவிக்கப்படும் என்றார்.