அதிமுக விட்டுக்கொடுத்த தொகுதியில் பாஜகவுக்கு ஏற்பட்ட பரிதாப நிலைமை - 2ம் இடம் கூட இல்லை..!

Update: 2023-05-14 02:00 GMT

கர்நாடகாவில் அதிமுக பாஜகவுக்கு விட்டுக்கொடுத்த புலிகேசியில் பாஜக படுதோல்வியை சந்தித்தது.

கர்நாடகாவில் தமிழர்கள், இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் தொகுதியில் அதிமுக வேட்பாளரை நிறுத்தியது. பின்னர் கூட்டணிக் கட்சியான பாஜக கேட்டுக்கொண்டதால் அதிமுக தனது வேட்பாளர் அன்பரசனை திரும்பப்பெற்றது. இப்போது தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் வேட்பாளர் ஸ்ரீனிவாசா 62 ஆயிரத்து133 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றார். ஸ்ரீனிவாசா 87 ஆயிரத்து 214 வாக்குகளை பெற்ற நிலையில் இரண்டாம் இடம் பிடித்திருக்கும் பகுஜன் சமாஜ் வேட்பாளர் அகண்ட ஸ்ரீனிவாச மூர்த்தி 25 ஆயிரத்து 81 வாக்குகளை பெற்றிருக்கிறார். பாஜக வேட்பாளர் முரளி வெறும் 10 ஆயிரத்து 585 வாக்குகளை மட்டுமே பெற்றிருக்கிறார்.

Tags:    

மேலும் செய்திகள்