IPL-க்கு போட்டியாக WPL... ரசிகர்களுக்கு ஏமாற்றம் தந்த சென்னை..! முழு விபரம்...
ஐபிஎல் தொடரை போன்று மகளிருக்கான பிரிமீயர் லீக் தொடரை தொடங்கியுள்ள பிசிசிஐ அதற்கான ஏலத்தை எடுத்தது.
இதில், அகமதாபாத், மும்பை, பெங்களூரு, டெல்லி, லக்னோவை மையப்படுத்தி 5 அணிகள் உருவாக்கப்பட்டுள்ளன
அதிகபட்சமாக அகமதாபாத் அணியை அதானி குழுமம் ஆயிரத்து 289 கோடி ரூபாய்க்கும்,
ராயல் சேலஞ்சர்ஸ் நிர்வாகம் பெங்களூரு அணியை 901 கோடி ரூபாய்க்கும் ஏலமெடுத்தது
ஒட்டுமொத்தமாக 4 ஆயிரத்து 669 கோடி மதிப்பில் 5 அணிகள் ஏலமெடுக்கப்பட்டதாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அறிவித்துள்ளார்.
இதன் மதிப்பு 2008ஆம் ஆண்டு ஐபிஎல்லின் அறிமுக தொடரைவிட அதிகம் எனவும் ஜெய் ஷா மகிழ்ந்துள்ளார்.
எனினும் சென்னையை மையப்படுத்தி அணி இல்லாதது ஏராளமான ரசிகர்களை ஏமாற்றமடைய வைத்துள்ளது.