- தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை, ஏமாற்றம் அளிக்கும் வகையில் இருப்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
- அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசின் பல திட்டங்களுக்கு, இந்த நிதிநிலை அறிக்கையில் புதிய தமிழ் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன என்று குறிப்பிட்டுள்ளார்.
- வரும் செப்டம்பர் மாதம் மகளிர் உரிமைத்தொகையை வழங்கும்போது, 28 மாத நிலுவைத் தொகையுடன் சேர்த்து, 29 ஆயிரம் ரூபாயாக வழங்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
- தகுதியுடைய மகளிருக்கே உரிமைத்தொகை என்று மடைமாற்றாமல், அனைவருக்கும் உரிமைத்தொகை என்று தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி, 2 புள்ளி 2 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
- சென்னையில் உலகளாவிய அதிநவீன விளையாட்டு நகரத்தை அமைப்போம் என்று பட்ஜெட்டில் அறிவித்து விட்டு அதற்கு ஒரு ரூபாய் கூட நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.