“41 உயிர்கள் பலி.. கனத்த இதயத்துடன் நிற்கிறேன்.. மனசாட்சியை அடகு வைக்க முடியாது“ - எதிர்க்கட்சிகளுக்கு முதல்வர் உருக்கமான கோரிக்கை
- ஆன்லைன் சூதாட்டத்தால் 41 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் - முதலமைச்சர் ஸ்டாலின்
- கனத்த இதயத்துடன் இங்கு நின்று கொண்டிருக்கிறேன் - முதலமைச்சர் ஸ்டாலின்
- என் தற்கொலை கடைசி தற்கொலையாக இருக்க வேண்டும் என்று சென்னையை சேர்ந்த சுரேஷ் கடிதம் எழுதி வைத்துள்ளார் - முதலமைச்சர் ஸ்டாலின்
- நாளுக்கு நாள் மரணங்கள் கண்ணுக்கு முன்னால் அதிகரித்து வருகிறது - முதலமைச்சர் ஸ்டாலின்
- தற்கொலையை தடுக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் அரசிடம் உள்ளது - முதலமைச்சர் ஸ்டாலின்
- ஆன்லைன் சூதாட்டத்தை தடுப்பது குறித்து அறிவுரை வழங்க ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைத்தோம் - முதலமைச்சர் ஸ்டாலின்
- ஆன்லைன் சூதாட்டம் குறித்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் கருத்து கேட்கப்பட்டது - முதலமைச்சர் ஸ்டாலின்
- மாணவர்களின் படைப்பாற்றல் பாதிக்கப்படுவதாக குழு அறிக்கை அளித்தது - முதலமைச்சர் ஸ்டாலின்
- ஆன்லைன் சூதாட்டத்தையும், ரம்மியையும் தடை செய்ய வேண்டும் என்று குழு அறிக்கை கொடுத்தது - முதலமைச்சர் ஸ்டாலின்
- ஆன்லைன் சூதாட்டம் குறித்த வரைவு தடை சட்ட மசோதாவுக்கு அமைச்சரவை அனுமதி கொடுத்தது - முதலமைச்சர் ஸ்டாலின்
- அமைச்சரவை அனுமதியை தொடர்ந்து அவசர சட்டம் கொண்டுவரப்பட்டது - முதலமைச்சர் ஸ்டாலின்