பரபரப்பை ஏற்படுத்திய ஏடிஎம் கொள்ளை - பல உத்தரவுகளை பிறப்பித்த டிஜிபி சைலேந்திரபாபு
- திருவண்ணாமலை ஏடிஎம் வங்கி கொள்ளை எதிரொலியாக, தமிழகத்தில் உள்ள வங்கி அதிகாரிகளுடன் டிஜிபி சைலேந்திரபாபு ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில்
- 51 பொது மேலாளர்கள் மற்றும் பொறுப்பு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
- கூட்டத்தில், வங்கி மற்றும் ஏடிஎம் மையங்களில் உள்ள பணத்தை கண்காணிக்க மறைமுகமான கேமராக்கள் நிறுவப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
- முகத்தை தெளிவாக அடையாளம் காணும் அளவுக்கு மென்பொருள் அடங்கிய கேமராக்களை பொருத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ள டிஜிபி, வங்கியில் எழுப்பப்படும் அபாய ஒலி, அருகில் உள்ள காவல் நிலையத்திலும் ஒலி எழுப்பும் வகையில் வழிவகை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.