மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் நடிகர் பிரபு

Update: 2023-02-28 01:46 GMT
  • சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள மெட்வே மருத்துவமனையில், நடிகர் பிரபு கடந்த 20ம் தேதி சிறுநீரகப் பிரச்சினை காரணமாக அனுமதிக்கப்பட்டார்.
  • அவருக்கு சிறுநீரகத்தில் கல் அடைப்பு இருந்தது கண்டறியப்பட்டு, மறுநாள் லேசர் அறுவை சிகிச்சை மூலம் சிறுநீரகக் கற்கள் அகற்றப்பட்டன.
  • இதைத் தொடர்ந்து, அவருக்கு ஏற்பட்டு இருந்த சிறுநீரகத் நோய்த் தொற்றுக்கும் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு, அவர் குணமடைந்தார்
  • . பின்னர் சில நாட்கள் ஓய்வில் இருந்த அவர், பூரண உடல்நலத்துடன் நேற்று வீடு திரும்பினார்.
Tags:    

மேலும் செய்திகள்