திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில்தைப்பூச விழாவில் குவிந்த பக்தர்கள்... மூட்டை மூட்டையாக அரிசி காணிக்கையாக குவித்த பக்தர்கள்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், தைப்பூச விழா கடந்த 5ஆம் தேதி கொண்டாடப்பட்டது.
இந்த விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்ற நிலையில், அவர்கள் நேர்த்திக்கடனாக அரிசி, கரும்பு, நெல் மற்றும் வேல் உள்ளிட்டவைகளை வழங்கினர்.
இந்நிலையில், பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய அரிசி உள்ளிட்ட பொருட்கள் மூட்டை மூட்டையாக, சண்முக விலாச மண்டபத்தில் குவித்து வைக்கப்பட்டுள்ளன.
செம்பு, வெள்ளி, பித்தளையால் ஆன வேல், காவடிகளும் மண்டபத்தில் குவித்து வைக்கப்பட்டுள்ளன.
இதனிடையே, தங்கம், வெள்ளி மற்றும் ரொக்க பணம் உள்ளிட்ட காணிக்கை பொருட்களை கணக்கிடும் பணி வியாழக்கிழமை நடைபெறும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.