காமன்வெல்த் பாராளுமன்ற மாநாட்டில் சபாநாயகர் அப்பாவு பங்கேற்கிறார் - சென்னையில் இருந்து கனடாவுக்கு புறப்பட்டுச் சென்றார்
காமன்வெல்த் பாராளுமன்ற மாநாட்டில் சபாநாயகர் அப்பாவு பங்கேற்கிறார் - சென்னையில் இருந்து கனடாவுக்கு புறப்பட்டுச் சென்றார்
65-ஆவது காமன்வெல்த் நாடாளுமன்ற மாநாடு, கனடா நாட்டில் உள்ள ஹாலிபேக்ஸ் நகரில், வரும் 21-ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, தமிழக சட்டபேரவை தலைவர் அப்பாவு சென்னையில் இருந்து விமானம் மூலம் கனடாவுக்கு புறப்பட்டுச் சென்றார். அவருடன் சட்டமன்ற செயலாளர் சீனிவாசனும் சென்றுள்ளார். முன்னதாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அப்பாவு, தமிழக அரசு செயல்பாடுகளை உலக அரங்கில் தெரிவிப்பேன் என்றார்.