திமுக முன்னாள் எம்பி மஸ்தான் கொலை வழக்கில் அவரது தம்பி கைது
5 லட்சம் ரூபாய் கடனை திரும்ப கேட்டதால் நண்பர்கள் உதவியுடன் அண்ணனை கொன்றதாக வாக்குமூலம்
கொலை வழக்கில் கைதான இம்ரான் பாஷாவுடன் மஸ்தானின் தம்பி கெளசே ஆதம்பாஷா செல்போனில் அதிக நேரம் பேசியது கண்டுபிடிப்பு
செல்போன் உரையாடல் குறித்து விசாரித்த போது, மஸ்தான் கொலையில் அவரது தம்பிக்கும் தொடர்பு இருப்பதை கண்டறிந்தது போலீஸ்
பூர்வீக சொத்து தகராறு, பண பிரச்சினையே மஸ்தான் கொலைக்கு முக்கிய காரணம் என கைதான தம்பி வாக்குமூலம்
கைது செய்யப்பட்ட கெளசே ஆதம்பாஷா செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைப்பு