பகவதி அம்மன் கோவிலில் பரணி விழா- ராட்சத காவடி, கரகம் எடுத்து ஆடிய பக்தர்கள்
- நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே பகவதி அம்மன் கோயிலில் மகா கும்ப பரணி விழா வெகு விமரிசையாக நடைப்பெற்றது
- கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட தொரப்பள்ளி பகுதியில் பல்வேறு சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் வாழ்ந்து வருகின்றனர்
- .இப்பகுதி மக்கள் வனப்பகுதியை ஒட்டி உள்ள பகவதி அம்மனை வழிப்பட்டு வரும் நிலையில், விவசாயம் செழிக்க வேண்டி மகா கும்ப பரணி விழா நடத்தினர்.
- அப்போது, ராட்சத காவடி மற்றும் மின் விளக்குகள் நிறுவப்பட்ட ராட்சத கரகம் உள்ளிட்டவைகளை ஏந்தியவாறு நடனமாடி வந்தனர்.
- மேலும், நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் ஒற்றுமையாக இருப்பதற்காக, உடைத்த தேங்காயில் விளக்கு ஏற்றி வழிபட்டனர்.
- பின்னர், செண்டை மேளங்கள் முழங்க உற்சாக நடனம் ஆடி மகிழ்ந்தனர்.